Tuesday

Samaritan Girl


மீண்டும் கிம் கி டுக்கின் ஒரு படம். Samaritan Girl. அவருடைய Spring, Summer, Fall, Winter and Spring பார்த்த பிறகு அவரது மற்ற படங்களை பார்க்க தூண்டியது.
(3 Iron, The Bow,Time,The Isle....)

Samaritan Girl: Yo-Jin , Je-Yong இருவரும் பள்ளி தோழிகள். இவர்களுக்கு ஐரோப்பாவை சுற்றிபார்க்க வேண்டும் என்ற ஆசை. இதற்காக பணம் சேர்க்க ஆரம்பிகிறார்கள்.
பணம் சேர்க்க இவர்கள் எடுத்துகொள்ளும் வழி விபச்சாரம். Je-Youg விபச்சாரம் செய்யவும் Yo-Jin ஏஜென்டாகவும் செயல்படுகிறாள். Je-Youg, Yo-Jinனிடம் வசுமித்ரா என்ற பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பெண்ணைப் பற்றிச் சொல்கிறாள். அவளிடம் வரும் ஒவ்வொரு ஆணுமே, அவளை விட்டுச் சென்றபின், புத்தபிக்‌ஷுவாக மாறிவிட்டனர் என்றும், அதற்கு, அவளது இனிய சுபாவமே காரணமாக இருந்தது என்றும், ஸெக்ஸில் ஈடுபடும் ஒவ்வொருவருமே குழந்தையாக மாறிவிடுவதனால் இது சாத்தியமானது என்றும் சொல்லி, இனிமேல் தன்னை வசுமித்ரா என்று அழைக்க வேண்டும் என்றும் சொல்கிறாள்.
இப்படி சம்பாதிக்கும் பணத்தை Yo-Jin சேமித்து வைக்கிறாள். Yo-Jin ற்கு இப்படி பணம் சேர்ப்பது பிடிக்க வில்லை. ஆண்களுடன் உறவு வைத்துக்கொண்ட பிறகு Je-Youg அங்கு நடந்த உரையாடல்கள், அந்த ஆணை பற்றி Yo-Jinனிடம் சொல்கிறாள். Yo-Jin இவர்கள் அனைவரும் கெட்டவர்கள் இனி இந்த முறையில் நாம் பணம் சேர்க்க வேண்டாம் என்றும்
Je-Yougகிடம் ஒவ்வொரு முறையும் கூறுவாள்.

ஒருநாள் Jo-Youg ஒரு விடுதி அறையில் ஒரு ஆணுடன் இருக்கிறாள். Yo-Jin அவளுக்காக கீழே காத்து கொண்டிருக்கிறாள். அப்பொழுது போலீஸ் வந்து விடுகிறது. Jo-Youg அந்த விடுதியின் ஜன்னலில் இருந்து கீழே குதிக்க முயற்சிக்கிறாள். Yo-Jin எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கீழே குதித்து விடுகிறாள். அபாயகரமான நிலையில் Jo-Yougகை தூக்கிகொண்டு மருத்துவமனை நோக்கி ஓடுகிறாள் Yo-Jin. இறக்க போகும் தருவாயில் Jo-Youg தன்னுடன் உறவு கொண்ட ஒரு இசையமைப்பாளனைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறாள்.
Yo-Jin அந்த இசையமைப்பாளனைப் தேடி ஓடுகிறாள். அவனை கண்டு நடந்தவற்றை கூறி அவனை மருத்துவமனைக்கு அழைக்கிறாள். அவனோ தனக்கு நேரமில்லை எனவும், அப்படி வருவதென்றால் நீ என்னுடன் படுக்க வேண்டும் என்றும் கூறுகிறான். Yo-Jin அதற்கு சம்மதித்து அவனை மருத்துவ மனைக்கு அழைத்து செல்கிறாள். Jo-Yong இறந்து விடுகிறாள்.
மிகவும் மனமுடைந்து போன Yo-Jin சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் எரித்துவிட முடிவு செய்கிறாள். பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு, தனது தோழியின் ஆத்மா சாந்தியடைய தனது தோழி அனுபவித்த அத்தனை ஆண்களுடனும் தானும் ஸெக்ஸ் வைத்துக்கொண்டு அவர்கள் தந்த அந்தப் பணத்தை அவர்களிடமே திருப்பித் தந்துவிடவேண்டும் என்று முடிவு செய்கிறாள்.

ஒருநாள் Yo-Jin ஒரு ஆணுடன் இருப்பதை Yo-Jinன் தந்தை பார்த்து விடுகிறார். போலீஸ் அதிகாரியான அவர் தன் மகளின் இந்த செயலை கண்டு துடிக்கிறார். பிறகு அவளை பின் தொடர்கிறார். அவளை சந்திக்க வரும் ஆண்களை அவளுக்கு முன்னமே சந்தித்து அவர்களை அவளை சந்திக்க விடாமல் செய்கிறார். இவளும் எப்படியோ சம்பந்தபட்ட மனிதர்களை சந்தித்து அவர்களிடம் பணத்தை கொடுக்கிறாள். கடைசியாக ஒருவனிடம் அவனது பணத்தை கொடுத்துவிட்டு எல்லாம் முடிந்தது என்று திரும்புகிறாள். அவனை பின் தொடர்ந்து சென்ற Yo-Jinன் தந்தை அவனை கொன்று விடுகிறார்.

பிறகு Yo-Jinய் அழைத்துக்கொண்டு தனது மனைவியின் கல்லறைக்கு செல்கிறான்.இருவரும் அதிகமாக பேசாமலே பயணம் செய்கின்றனர் . திரும்பும் வழியில் Yo-Jin தனது தந்தை Car ஓட்டுவதை பார்த்துகொண்டே வருகிறாள். அவளது தந்தை அவளிடம் கேட்கிறார் car ஓட்டவேண்டுமா என்று. எனக்கு பயமாக இருக்கிறது என்று பதில் சொல்கிறாள். ஒரு நீரோடையின் அருகில் நிறுத்தி அவளுக்கு Car ஓட்ட கற்று தருகிறார். அவளும் கவனமாக கற்றுகொள்கிறாள். பிறகு அவளது தந்தை தான் செய்த கொலையை போலீசிடம் சொல்லி அவளிடம் சொல்லாமலே ஒரு Car ல் ஏறி சென்று விடுகிறார் . Yo-Jin தனது தந்தையை பின் தொடர்கிறாள். இத்துடன் படம் முடிகிறது.

ஒன்றும் அறியாத சிறு பெண் தவறு, சரி எதுவென்றே தெரியாமல் இருக்கும் Yo-Jin தனது வாழ்கையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள் என்று அவள் Car கற்றுகொள்ளும் விதத்தில் சொல்லபட்டிருபது ரசிக்கும் படியான காட்சி. தனது தந்தையை பின் தொடரும்போது பள்ளத்தில் மாட்டிகொண்ட வண்டியை தானாகவே முயற்சி செய்து வெளியில் எடுத்து வருவதில், அவள் வாழ்கையில் போராடி வருகிறாள் என்பதுவாக படம் முடிகிறது.

Sunday

As Far As My Feet will Carry Me


இரண்டாம் உலகப்போரின்போது சைபீரியாவின் சுரங்கத்தில் ஜெர்மானிய வீரர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு சுரங்கத்தில் உள்ள மருத்துவரின் உதவியால் அங்கிறுந்து தப்பிக்கிறான் படத்தின் கதாநாயகன். அது பனிக்காலம். எங்கும் பனி.சைபீரியாவை நடந்தே

கடக்கிறான். பனிப்புயல், சூறாவளி என்று இயற்கையின் சீற்றங்களில் தனி மனிதனாக ஒவ்வொரு அடியாக நடந்து செல்கிறான். வழியில் இரு ரஷ்ய வேட்டயர்களை சந்திக்கின்றான். அவர்களின் உதவியுடன் காட்டாற்றை கடந்து செல்கிறான். மீண்டும் பனி மலைகளின் நடுவே பயணம். ஓநாய்களின் பிடியில் சிக்கிய அவனை அங்கு வாழும் ஒரு சிறு பழங்குடி மக்கள் காப்பாற்றுகிறார்கள். பிறகு அங்கிருத்து பயணபடுகிறான். சில ரயில் பயணம். பெரும்பாலும் கால்நடையாக மட்டுமே. இப்படியே நடந்து பெர்சியாவை அடைகிறான். ( இங்கு தாஜ்மஹாலின் பிம்பம் போலவே முழுமை பெறாத கட்டிடம் ஒன்று உள்ளது). அங்கு ஒரு போலந்து நாட்டுகாரனின் உதவியுடன் ரஷ்யாவின் எல்லையை கடக்க போலி பாஸ்போர்ட் எடுத்து கொண்டு பயணிக்கிறான். இதற்கு நடுவே இவனை தேடிபிடித்தே தீரவேண்டும் என்ற வெறியோடு அந்த சுரங்கத்தின் கமான்டர் அவனை தேடிகொண்டிருக்கிறான். அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து. ரஷ்யாவின் எல்லையை கடந்து டெஹ்ரானின் எல்லையை அடைகிறான்.

அங்கு அவன் ரஷ்ய உளவாளி என்ற சந்தேகத்தில் சிறைபடுகிறான். பிறகு 2 வருடங்கள் கடந்து ஜெர்மானிய அரசு அதிகாரியின் உதவியால் ரஷ்ய உளவாளி இல்லை என்று அறிந்து டெஹ்ரானில் இருந்து பெர்லின் சென்று தனது மனைவி, குழந்தைகளோடு சேர்கிறான்.

1942 வருடம் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறான். சுரங்கத்தில் இருந்து 1949 வருடம் தப்பித்து 1952 வருடம் மீண்டும் தனது குடும்பத்தை அடைகிறான்.



Sin Nombre


Willy, Smiley என்ற 12 வயது சிறுவனை Mara Salvatrucha என்ற மெக்ஸிகோ street gang கிடம் சேர்ப்பதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. Sayra தனது தந்தையுடனும், மாமாஉடனும் New Jersy செல்ல திட்டமிட்டு ஒரு சரக்கு ரயிலின் கூரை மீது பயணிக்கிறார்கள். இவர்களது பயணம் Visa,Immigiration ஏதும் இல்லாமல் ஆபத்தான சூழ்நிலையில் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவை கடப்பது. இதற்கு இடையில் willy ன் காதலியை அந்த street gang ன் தலைவன் கொன்றுவிடுகிறான். இந்த சூழலில் willy, smiley, street gang leader மூவரும் Sayra பயணம் செய்யும் ரயிலில் கொள்ளை அடிக்க செல்கின்றனர்.

அங்கே sayra வுடன் தவறாக நடக்க முயற்சிக்கும் தலைவனை willy கொன்றுவிடுகிறான். smiley யை திரும்ப போகசொல்லிவிட்டு அந்த ரயிலிலேயே பயணம் செய்கிறான். திரும்பசென்ற smiley யை அவனது கூட்டாளிகள் அனைவரும் சந்தேகிக்க அந்த 12 வயது சிறுவன் willy யை கொன்றுவிட்டு வருவதாக சொல்லி willy யை தேடி செல்கிறான். sayra, willey யையும் தங்களுடன் அமெரிக்க வந்துவிடுமாறும் தங்களுடன் இருக்குமாறும் கேட்கிறாள். தனது சாவு தனக்கே தெரியாது. இந்த சூழலில் நான் உங்களுடன் வருவது உங்களுக்கும் பாதுகாப்பு அல்ல எனகூறி அவளிடம் இருந்து பிரிந்து செல்கிறான். ஆனால் sayra அவனை பின்தொடர்கிறாள். Sayra வை காணாமல் அவளில் தந்தையும்,மாமாவும் ரயிலில் இருந்து இரங்கி பிறகு அவளை எங்கு தேடுவது என்று தெரியாமல் மீண்டும் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். ரயில் மேல் mexico Border யை கடக்க முயற்சி செய்பவர்களை போலீசார் தடுபதற்காக செய்கின்ற துப்பாக்கிசூட்டில் Sayra வின் தந்தை இறந்து விடுகிறார். சில பல தடைகளை மீறி Willy, Sayra வுடன் மெக்ஸிகோ எல்லையை கடக்க முயல்கையில் Smiley அவனது கூட்டாளிகளுடன் சேர்ந்து willy யை கொன்றுவிடுகிறான். sayra எல்லையை கடந்து தனது தந்தையின் குடும்பத்தோடு சேர்கிறாள்.