Thursday

உடைந்த நிலாக்கள்


கி.பி, கி.மு வில் நடந்த நிஜங்களை காதல் சோகங்களை கவிதைகளாய் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய்.

சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை
கவிதைகளாய் தொகுத்து நெய்யப்பட்டது இந்த உடைந்த நிலாக்கள்.

கவிஞர் சுரதா :உலகம் எங்கும் யுத்தம். ஒரு நாள் ஏவுகணைகளை ஏவிக் கொண்டு நிலவையும் இவர்கள் உடைத்துவிடக் கூடும். அப்போது 'உடைந்த நிலாக்கள்' உலவும். ஆனால்,இந்த 'உடைந்த நிலா'க்களோ காதலால் 'உடைந்த நிலாக்கள்'!

கவிஞர் போட்டிருக்கும் காதல் கணக்குகள் அற்புதமானவை.

பூ+தீ= வாலிபம்
வாலிபம்+பூ=காதல்
வாலிபம்+தீ=காமம்

ஆசை X கவிதை = பருவம்
பருவம் X கவிதை = காதல்
பருவம் X ஆசை = காமம்

இளமை என்ற சொல்லை
அர்த்தப்படுத்தும் சொல் 'காதல்'
காதல் என்ற சொல்லை
அர்த்தப்படுத்தும் சொல் 'காமம்'

ஆண் என்றால் என்ன என்று ஆணுக்கும்
பெண் என்றால் என்ன என்று பெண்ணுக்கும்
புரிய வைப்பது 'காதல்'

***** ஒரு கவிதை காவியம் *****





Wednesday

பட்டாம்பூச்சி


பட்டாம்பூச்சி (ஆங்கிலத்தில் Papillon, மூலம் : French )

Henri Charriere ன்னும் Frenchகார‌ரின் சுயசரிதை.செய்யாத‌ ஒரு கொலைக்காக‌ குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் முழுவதும் தீவாந்தரச் சிறையில் கழிக்க த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்டு, French க‌ய‌னாவிற்க்கு (S.America) நாடுக‌ட‌த்த‌ப்ப‌ட்டு சிறைவைக்க‌ப்பட்டான் (1930க‌ளில்) .13ஆண்டு காலத்துக்கு சிறை சிறையாக அவன் தப்பி ஓடிக்கொண்டே இருந்தான்.ஓட்டைப் படகுகளிலும், கட்டுமரங்களிலும், புதை மணல்களிலும், இருண்ட அடவிகளிலும், சிவப்பு இந்தியர்களிடமும், தன்னைவிட முரடர்களான கைதிகளிடமும் வாழ்கையை வைத்து போராடினான்.

ஒரு சிறு ப‌ட‌கில் 1000 மைல்க‌ள் க‌ட‌லை க‌ட‌ந்து டிரினிடாடை ஒரு முறை அடைந்து சுமார் 6 மாத‌கால‌ம் செவ்விந்திய‌ர்க‌ளுடன் வ‌சித்தான் ; அங்கு ம‌ன‌ம் புரிந்தான். மீன்டும் France செல்ல‌ முய‌ல்கையில் பிடிப‌ட்டு 4 ஆண்டு த‌னிமைச் சிறை த‌ண்ட‌னை. த‌னிமை சிறை இருப்ப‌திலேயே கொடுமையான‌து. நிச‌ப்த‌ம் ம‌ட்டுமே. ப‌ல‌ருக்கும் பைத்திய‌ம் பிடிக்கும். அதையும் வெல்கிறான்.

மீண்டும் மீன்டும் த‌ப்ப‌ முய‌ற்ச்சி. ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள், எதிரிக‌ள், துரோக‌ங்க‌ள், ந‌ம்பிக்கைக‌ள். ம‌ர‌ண‌ங்க‌ள், சிறை க‌ல‌க‌ங்க‌ள்...

க‌டைசியாக‌ டெவில்ஸ் தீவில் சிறை. கொப்ப‌ரை தேங்க‌யா நிர‌ம்பிய‌ சாக்கு மூட்டை மீது சவாரி செய்து கடலை கடந்து, வெனிசுலாவை அடைந்து இறுதியில் வெற்றி பெறுகிறான்.

சிறை களகங்கள், தனிமை சிறையின் கொடுமைகள், அலுமினிய குழாய்களில் பணத்தை வைத்து உடம்பில் மறைத்து வைப்பது, கடலில் மூழ்கி முத்து எடுப்பது, கடலின் நிலையை அறிந்து படகை செலுத்துவது நினைத்து பார்க்க முடியாத பிரமிக்க வைக்ககூடிய நிகழ்வுகள் அடங்கிய ஒரு மனிதனின் சுயசரிதை.சுமார் 850 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை படிக்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.