Tuesday

The Mirror

Jafar Panahi என்ற ஈரானிய இயக்குனர் இயக்கிய திரைப்படம். Mina என்ற பள்ளிச்சிறுமி பள்ளி முடிந்து தனது தாயாருக்காக காத்திருகிறாள். Minaவின் தாய் வராததால் Mina தானாகவே வீட்டிற்கு செல்லலாம் என்று பேருந்து நிலையம் சென்றடைகிறாள். ஒரு பேருந்தில் ஏறுகிறாள் ஆனால் அந்த பேருந்து வேறு ஒரு வழித்தடத்தில் சென்று விடுகிறது. கடைசியாக இந்த சிறுமி மட்டும் பேருந்தில் இருந்து இறங்காததை கண்ட பேருந்து ஊழியர் அவளிடம் விவரம் கேட்கிறார் பிறகு தனது சகஊழியர் ஒருவரிடம் சொல்லி அந்த சிறுமியை அவள் போக வேண்டிய இடத்தில் இறக்கிவிட சொல்கிறார்.

ஒரு கை உடைந்து கட்டுபோட்டிருக்கும் அந்த சிறுமி என்னால் இனி இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கட்டுக்களை அவிழ்த்துவிட்டு பேருந்தில்லிருந்து இறங்கி விடுகிறாள். எவளவோ பேசியும் அவள் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு போகிறாள்.
பேருந்தில் பயணிகளின் உரையாடல், ஈரான் தென்-கொரிய soccer match ரேடியோ ஒலிபரப்பு. நகரத்தின் பரபரப்பு, போக்குவரத்து என அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.
கையில் போட்டிருக்கும் கட்டுக்களை அவிழ்க்கும் முன்பு ஒரு குரல் கேட்கும் கேமரா வை பார்காதே என்று பிறகு இனி இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சென்று விடுவாள். அப்பொழுதுதான் நமக்கு தெரியும் அது Movie Shooting என்று.
அவளோடு அந்த shooting கில் நடித்த ஒரு மூதாட்டியை வழியில் பூங்காவில் சந்தித்து பேசுவாள். நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று அதற்கு காரணம் என்ன என்று அந்த மூதாட்டியிடம் கூறுவாள். " எபோழுதும் அழுவது போலவே இருக்க வேண்டும், அது மட்டுமல்லாது இந்த கை உடைந்தது போன்ற கட்டு. இதை என் நண்பர்கள் பார்த்தால் என்னை கேலி செய்வார்கள் " இப்படி கூறுவாள்.
ரசிக்கும் படியான நிறைய காட்சிகள் உண்டு. அழகான திரைப்படம்

Thursday

மனு தர்மம்

மனு தர்மம். மனு நீதி பற்றி சொல்லி கேட்டு இருக்கோம். படிச்சு பார்த்தா. அது மனு தர்மமா தெரியலை. படிச்சு பார்த்தா. அது மனு தர்மமா தெரியலை. இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.

மனு என்ற என்ற மன்னன் இந்நூலை இயற்றியவர், இயற்றியவரின் பெயராலேயே இது இந்த பெயர் பெற்றுள்ளது.

இந் நூலானது கி.மு. 170 க்கும் 150 க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், மெளரியர்களின் புத்த மத அரசுக்கு எதிரான பிராமணப் புரட்சியின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் பிராமணியச் சட்டத் தொகுப்பாகவே இது வெளிவந்துள்ளது என்றும் அம்பேத்கர் (1995:165-166) கூறுகிறார்.

உலகம் ஆரம்பத்துல இருட்டா தண்ணியில மூழ்கி கிடந்ததாம். அப்போ ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம். அதுலதான் பிரம்மன் இருந்தாராம். நாரா அப்படின்ற தண்ணியல அயணம் (வசித்தல்) செஞ்சதால அவருக்கு நாராயணா அப்படின்னும் பேராம். அந்த முட்டை உடைஞ்சு மேல் பகுதி சொர்க்கமாவும், கீழ்ப்பகுதி பூமியாவும் ஆச்சாம். அப்புறம் அவர் உலகத்தை படைக்க ஆரம்பிச்சாராம். நெருப்பு, காத்து, சூரியன் இதுல இருந்து அவர் ரிக், யஜீர், சாம வேதங்களை எடுத்து அதும்படி சிருஷ்டிய ஆரம்பிச்சாராம். அப்புறம் பஞ்சபூதங்கள், காலம், நல்லது கெட்டதெல்லாம் படைச்சுட்டு மனுசப்பயலை படைக்கணும்னு முடிவு பண்ணாராம்.

மனு தர்மம் பொதுவாகக் ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிக்கிறது.
''மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31)."
பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களை முறையே வாய், கை, தொடை, கால் இதிலிருந்து படைச்சாராம்.அப்புறம் மரிகி, அத்ரி, ஆங்கிரஸ், புலஹா, கிருது, பிரகதேஸ், வஷிஸ்டர், நாரதர்,யக்ஷர்கள், ராக்சசர்கள், அசுரர்கள்,கந்தர்வர்கள், அப்சரசுகள், நாகர்கள்,எல்லாரையும் படைச்சாராம். கூடவே புல், பூண்டு பூச்சி, பறவை, பாம்புனு படைச்சிருக்காரு.கிருத, திரேத, துவாபர கலியுகத்தை பற்றி குறிப்பு இருக்கு.

பிராமணனோட தொழில் வேதத்தை படித்தல் சொல்லி கொடுத்தல். பிராமணர்களே யாவரிலும் அதிபுத்திசாலிகள் என்கிறார் மனு. அது இல்லாமல் பெயர் சூட்டும் விதிகளை வகுக்கிறார்.பிராமணணின் முதல் பெயர் மங்களகரமானதாகவும், சத்ரியனின் முதல் பெயர் வீரமானதாக அதிகாரத்தை குறிப்பதாகவும், வைசியனின் முதல்பெயர் செல்வத்தைக் குறிப்பதாகவும், சூத்திரனின் பெயர் விலக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.

பிராமணன் நான்கு சாதியிலும் திருமணம் செய்யலாம். சத்ரியன் சத்ரிய, வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். வைசியன் வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். சூத்திரன் சூத்திர பெண்ணை மட்டும் மணக்க வேண்டும் அனைவருக்கும் முதல் மனைவி அதே வர்ணத்தில் இருக்க வேண்டும்.

எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. பிராமணன் வெங்காயம் வெள்ளப்பூண்டு சாப்பிடக் கூடாது. பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாது.

அரசன் எப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது.

பிராமணனுக்கு வெறும் ஐந்து நாள் உபவாசமும் காயத்ரி மந்திர ஜபமுமாய் போகும் தண்டனை சூத்திரனுக்கு மரணத்தை விதிக்கிறது.
சூத்திரன் காதிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் தண்டனைகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு அப்படி இருப்பதாய் காணோம்.
ஒரு சில தண்டனைகள் சூத்திரனுக்க 8 மடங்கு பிராமணனுக்கு 64 மடங்கு என்று இருக்கிறது (அது அபராதத் தொகையாக இருக்கிறது ).சூத்திரனுக்கு எந்த கட்டத்திலும் வேதத்தை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறது.

மனு தர்மம் - குப்பை

Monday

the isle

கிம் கி டுக் கொரிய மொழி திரைப்பட இயக்குனர். இவரது Spring,Summer,Fall, Winter...and Spring படம் பார்க்க தற்செயலாக நேர்ந்தது. படம் ஆரம்பம் முதலே படத்தின் மேல் ஒரு ஈர்ப்பு, ஆர்வம். படம் ஆரம்பிக்கும் விதம் அதன் இசை, ஒளிப்பதிவு அனைத்தும் அருமை. பிறகு இவரது படங்களை பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. Time , 3-Iron, The isle என சில படங்கள் மட்டும் பார்த்தேன்.

The isle - இந்தத் திரைப்படம் உலகின் பார்க்கவே முடியாத குரூரமான முதல் பத்து படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது. இந்த படம் முழுவதுமே ஒரு ஏரியில்தான் நடக்கிறது . நதியிலிருந்து ஒருவன் வெளிப்படுவான்.அடர்த்தியாய் உயரமாய் வளர்ந்திருக்கும் பசும் புற்களினுள் நுழைந்து காணாமல் போவான்.நதியும்,பசும்புற்களும் அவனுமாய் அவளின் யோனிக்குள் உள்ளடங்கி இருப்பதாய் காட்சி அவளின் உடலில் சுருங்கும். நீரில் மூழ்கியிருக்கும் அவளது வெற்றுடலின் யோனிக்குள் இன்னொரு நதியும்,நெடிதுயர்ந்த பசும்புற்களும்,அவளின் காதலனும் பத்திரமாய் இருப்பதாக இந்த திரைப்படம் முடியும்.

ஏரியின் நடுவே ஒன்றிரண்டு படகு வீடுகள் உள்ளன. அதில் ஒரு படகின் சொந்தக்காரி Hee-jin. படகில் அவ்வீடுகளுக்கு மனிதர்களையும்,உணவுகளையும்,இன்பத்தையும் கொண்டு செல்வது அவள் வேலை. அவர்களுக்கு செக்ஸ் தொழிலாளிகளை வரவழைத்துக் கொடுப்பதும் Hee-Jinன் வேலைதான். சமயங்களில் அவளே அவர்களுக்கு வேசியாக இருப்பதும் உண்டு.

Hyun-shik என்ற இளைஞன் இங்கே படகு வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான் .நாலைந்து கொக்கிகள் கொண்ட மீன் தூண்டிலை உள் தொண்டைக்குள் விட்டு அதன் கயிற்றால் தூண்டிலை வெளியே இழுக்கிறான். ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவன் தொண்டைக்குள்ளிருந்து குறடு மூலமாகக் கொக்கிகளை எடுத்து விட்டு, புண் ஆறுவதற்காக வாயில் ஒரு குச்சியை வைத்து வாயை மூடாமலேயே வைத்திருக்கச் செய்கிறாள் Hee-Jin.
ஒருமுறை அவன் அவளிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சி செய்யும் போது, அவள் அதைத் தவிர்த்து விட்டு கரையிலிருந்து ஒரு வேசியை அழைத்து வருகிறாள். அந்த வேசியிடம் மற்ற வாடிக்கையாளர்களைப் போல் செக்ஸ் மட்டுமே வைத்துக் கொள்ளாமல் அவளோடு சிநேகபூர்வமாக இருக்கிறான் Hyun-shik . அவளுக்கு அது பிடித்திருக்கவே அவனைத் தேடி அந்தப் படகு வீட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்குகிறாள். அதைப் பார்த்து அவள் மீது பொறாமை கொள்ளும் Hee-Jin அந்த வேசியை ஏரியில் மூழ்கடித்துக் கொன்று விட்டு Hyun-Shik க்குடன் நெருங்கிப் பழகுகிறாள்.
வேசியைக் காணாமல் அவளைத் தேடி வரும் அவளுடைய ஏஜண்டையும் ஏரியில் மூழ்கடித்துக் கொன்று விடுகிறாள் Hee-Jin.
அந்த நிலையில் ஏரியிலிருந்து புறப்பட்டுக் கரைக்குச் சென்று விட விரும்புகிறான் Hyun-Shik . Hee-Jin அதைத் தடுக்கிறாள். Hyun-Shik அவளுக்குத் தெரியாமல் நீந்தியே சென்று விட முயலும் போது நீரில் மூழ்கிவிடப் பார்க்கும் அவனை Hee-Jin காப்பாற்றுகிறாள். ஆனால் அடுத்த முறை, அவன் படகிலேயே கரைக்குச் சென்று விட முயல்கிறான். Hyun-Shik தன்னை விட்டுப் பிரிந்து செல்வதைத் தாங்க முடியாத Hee-Jin மீன் தூண்டிலை எடுத்துத் தன்னுடைய யோனியின் உள்பகுதியில் விட்டு மாட்டி, அதை அந்தத் தூண்டில் கயிற்றின் மூலம் வெளியே எடுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். இந்த முறை Hyun-Shik அவளைக் காப்பாற்றுகிறான். அவளுடைய யோனிக்குள் சிறிய கிடுக்கியை விட்டு அந்தத் தூண்டில் கொக்கிகளை ஒவ்வொன்றாக எடுக்கிறான். பிறகு, புண் ஆறுவதற்காக யோனி வாயை மூடாமலேயே தொடைகளை அகற்றி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது அவளுக்கு. காயத்தில் மருந்து போட்டு விசிறி விடுகிறான் Hyun-Shik.
அப்போது வேறொரு படகில் ஒரு பயணியின் கைக்கடிகாரத்தை அவன் அழைத்து வந்த செக்ஸ் தொழிலாளி தவறுதலாக ஏரியில் தள்ளி விட்டு விடுகிறாள். அந்தப் பயணி நீரில் மூழ்குபவர்களை அமர்த்தி கடிகாரத்தைத் தேடும் போது Hee-Jinனால் மூழ்கடிக்கப்பட்ட இருவரின் பிரேதங்களும் கிடைக்கின்றன. பனி சூழ்ந்த அந்த ஏரியிலிருந்து ஹ்யூன் ஷிக்கும், ஹீ ஜின்னும் ஒரு படகில் ஒன்றாகக் கரைக்குப் பயணப் படுகிறார்கள் என்று முடிகிறது படம்.
படத்தின் வசனத்தை அரைப் பக்கத்தில் எழுதி விடலாம். Hee-Jinனின் தனிமைதான் படத்தின் முக்கியமான உள்ளீடு. பனி சூழ்ந்த அந்தப் பிரம்மாண்டமான ஏரியும், அதில் நிழல் வடிவமாகத் தெரியும் ஓரிரண்டு படகு வீடுகளும் Hee-Jinனின் தனிமையை மிக அற்புதமாகக் காட்சிப் படுத்துகின்றன.

Trailer :