எத்தனையோ முறை கேட்டிருந்த போதிலும் ஏனோ அந்த பாடல் அந்த தருணத்தில் மனதில் ஒரு பிரமிப்பை உண்டாக்கியது. தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாசப் பறவைகள்)இந்த பாடல். ஏதோ ஒரு ரேடியோவில் கேட்டேன். ஜென்சியின் குரலில் ஏதோ ஒரு மயக்கம் இந்த பாடலில். சரியென்று ஜென்சியின் பாடல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு பாடல்களுமே மீண்டும் மீண்டும் முனுமுனுக்க வைக்கின்ற பாடல்கள். இளையராஜாவின் இசையில் மனதை வருடி சென்றன.மலைச்சாரலில் நடக்கும்போது சில்லிட வைக்கும் பனிகாற்றை போல இருந்ததுஜென்சியின் குரல்.
ஜென்சியின் பாடல்கள் அனைத்தும் தெய்வீக ராகம்; தெவிட்டாத பாடல்..
மயிலே..மயிலே.. (கடவுள் அமைத்த மேடை )
மீன்கொடித் தேரில்..(கரும்புவில்)
என் வானிலே.. ஒரே வெண்ணிலா...(ஜானி)
ஒரு இனிய மனது... (ஜானி)
ஆயிரம் மலர்களே.. மலருங்கள்.. (நிறம் மாறாத பூக்கள்).
இரு பறவைகள் மலை முழுவதும்.. , (நிறம் மாறாத பூக்கள்).
தம்தன..தம்தன.. தாளம் வரும்.. (புதிய வார்ப்புகள்)
இதயம்... போகுதே.., (புதிய வார்ப்புகள்)
காதல் ஓவியம்... (அலைகள் ஓய்வதில்லை)
தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாசப் பறவைகள்)
அடிப் பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை..(முள்ளும் மலரும்)
கல்யாணம் என்னை முடிக்க.. (மெட்டி)
தீர்த்தக் கரைதனிலே (தைப்பொங்கல்)
வாடா என் ராஜாக்கண்ணா.. (ரிஷிமூலம்)
ஆத்தோர காத்தாட.. (எங்கேயோ கேட்ட குரல்)
உனக்கென தானே... (பொண்ணு ஊருக்குப் புதுசு)
கீதா..சங்கீதா... (அன்பே சங்கீதா)
தேவன் திருச்சபை மலர்களே (அவர் எனக்கே சொந்தம்)
பனியும் நீயே..மலரும் நானே.. (பனிமலர்) - Shankar ganesh
பூ மலர்ந்திட.. (டிக் டிக் டிக்)
வாடி என் கப்பக் கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை)
ஆடச் சொன்னாரே (வட்டத்துக்குள் சதுரம்)
வானத்துப்பூங்கிளி.. (திரிபுர சுந்தரி)
தோட்டம் கொண்ட ராசவே (பகலில் ஓர் இரவு)
அக்கா..ஒரு ராஜாத்தி (முகத்தில் முகம் பார்க்கலாம்)
நான் உன்னைத் திரும்ப திரும்ப.. (எல்லாம் உன் கைராசி)
காத்தாடுது ஆசை கூத்தாடுது (கரடி) -கங்கை அமரன்
என் கானம் இன்று அரங்கேறும் (ஈர விழிக் கனவுகள்)
மணியோசைக் கேட்டதா.. (இருளும் ஒளியும்)
காலை பனியில் (காயத்ரி)
அலங்கார பொன் ஊஞ்சலே - (சொன்னது நீ தானா)

