Tuesday

Samaritan Girl


மீண்டும் கிம் கி டுக்கின் ஒரு படம். Samaritan Girl. அவருடைய Spring, Summer, Fall, Winter and Spring பார்த்த பிறகு அவரது மற்ற படங்களை பார்க்க தூண்டியது.
(3 Iron, The Bow,Time,The Isle....)

Samaritan Girl: Yo-Jin , Je-Yong இருவரும் பள்ளி தோழிகள். இவர்களுக்கு ஐரோப்பாவை சுற்றிபார்க்க வேண்டும் என்ற ஆசை. இதற்காக பணம் சேர்க்க ஆரம்பிகிறார்கள்.
பணம் சேர்க்க இவர்கள் எடுத்துகொள்ளும் வழி விபச்சாரம். Je-Youg விபச்சாரம் செய்யவும் Yo-Jin ஏஜென்டாகவும் செயல்படுகிறாள். Je-Youg, Yo-Jinனிடம் வசுமித்ரா என்ற பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பெண்ணைப் பற்றிச் சொல்கிறாள். அவளிடம் வரும் ஒவ்வொரு ஆணுமே, அவளை விட்டுச் சென்றபின், புத்தபிக்‌ஷுவாக மாறிவிட்டனர் என்றும், அதற்கு, அவளது இனிய சுபாவமே காரணமாக இருந்தது என்றும், ஸெக்ஸில் ஈடுபடும் ஒவ்வொருவருமே குழந்தையாக மாறிவிடுவதனால் இது சாத்தியமானது என்றும் சொல்லி, இனிமேல் தன்னை வசுமித்ரா என்று அழைக்க வேண்டும் என்றும் சொல்கிறாள்.
இப்படி சம்பாதிக்கும் பணத்தை Yo-Jin சேமித்து வைக்கிறாள். Yo-Jin ற்கு இப்படி பணம் சேர்ப்பது பிடிக்க வில்லை. ஆண்களுடன் உறவு வைத்துக்கொண்ட பிறகு Je-Youg அங்கு நடந்த உரையாடல்கள், அந்த ஆணை பற்றி Yo-Jinனிடம் சொல்கிறாள். Yo-Jin இவர்கள் அனைவரும் கெட்டவர்கள் இனி இந்த முறையில் நாம் பணம் சேர்க்க வேண்டாம் என்றும்
Je-Yougகிடம் ஒவ்வொரு முறையும் கூறுவாள்.

ஒருநாள் Jo-Youg ஒரு விடுதி அறையில் ஒரு ஆணுடன் இருக்கிறாள். Yo-Jin அவளுக்காக கீழே காத்து கொண்டிருக்கிறாள். அப்பொழுது போலீஸ் வந்து விடுகிறது. Jo-Youg அந்த விடுதியின் ஜன்னலில் இருந்து கீழே குதிக்க முயற்சிக்கிறாள். Yo-Jin எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கீழே குதித்து விடுகிறாள். அபாயகரமான நிலையில் Jo-Yougகை தூக்கிகொண்டு மருத்துவமனை நோக்கி ஓடுகிறாள் Yo-Jin. இறக்க போகும் தருவாயில் Jo-Youg தன்னுடன் உறவு கொண்ட ஒரு இசையமைப்பாளனைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறாள்.
Yo-Jin அந்த இசையமைப்பாளனைப் தேடி ஓடுகிறாள். அவனை கண்டு நடந்தவற்றை கூறி அவனை மருத்துவமனைக்கு அழைக்கிறாள். அவனோ தனக்கு நேரமில்லை எனவும், அப்படி வருவதென்றால் நீ என்னுடன் படுக்க வேண்டும் என்றும் கூறுகிறான். Yo-Jin அதற்கு சம்மதித்து அவனை மருத்துவ மனைக்கு அழைத்து செல்கிறாள். Jo-Yong இறந்து விடுகிறாள்.
மிகவும் மனமுடைந்து போன Yo-Jin சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் எரித்துவிட முடிவு செய்கிறாள். பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு, தனது தோழியின் ஆத்மா சாந்தியடைய தனது தோழி அனுபவித்த அத்தனை ஆண்களுடனும் தானும் ஸெக்ஸ் வைத்துக்கொண்டு அவர்கள் தந்த அந்தப் பணத்தை அவர்களிடமே திருப்பித் தந்துவிடவேண்டும் என்று முடிவு செய்கிறாள்.

ஒருநாள் Yo-Jin ஒரு ஆணுடன் இருப்பதை Yo-Jinன் தந்தை பார்த்து விடுகிறார். போலீஸ் அதிகாரியான அவர் தன் மகளின் இந்த செயலை கண்டு துடிக்கிறார். பிறகு அவளை பின் தொடர்கிறார். அவளை சந்திக்க வரும் ஆண்களை அவளுக்கு முன்னமே சந்தித்து அவர்களை அவளை சந்திக்க விடாமல் செய்கிறார். இவளும் எப்படியோ சம்பந்தபட்ட மனிதர்களை சந்தித்து அவர்களிடம் பணத்தை கொடுக்கிறாள். கடைசியாக ஒருவனிடம் அவனது பணத்தை கொடுத்துவிட்டு எல்லாம் முடிந்தது என்று திரும்புகிறாள். அவனை பின் தொடர்ந்து சென்ற Yo-Jinன் தந்தை அவனை கொன்று விடுகிறார்.

பிறகு Yo-Jinய் அழைத்துக்கொண்டு தனது மனைவியின் கல்லறைக்கு செல்கிறான்.இருவரும் அதிகமாக பேசாமலே பயணம் செய்கின்றனர் . திரும்பும் வழியில் Yo-Jin தனது தந்தை Car ஓட்டுவதை பார்த்துகொண்டே வருகிறாள். அவளது தந்தை அவளிடம் கேட்கிறார் car ஓட்டவேண்டுமா என்று. எனக்கு பயமாக இருக்கிறது என்று பதில் சொல்கிறாள். ஒரு நீரோடையின் அருகில் நிறுத்தி அவளுக்கு Car ஓட்ட கற்று தருகிறார். அவளும் கவனமாக கற்றுகொள்கிறாள். பிறகு அவளது தந்தை தான் செய்த கொலையை போலீசிடம் சொல்லி அவளிடம் சொல்லாமலே ஒரு Car ல் ஏறி சென்று விடுகிறார் . Yo-Jin தனது தந்தையை பின் தொடர்கிறாள். இத்துடன் படம் முடிகிறது.

ஒன்றும் அறியாத சிறு பெண் தவறு, சரி எதுவென்றே தெரியாமல் இருக்கும் Yo-Jin தனது வாழ்கையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள் என்று அவள் Car கற்றுகொள்ளும் விதத்தில் சொல்லபட்டிருபது ரசிக்கும் படியான காட்சி. தனது தந்தையை பின் தொடரும்போது பள்ளத்தில் மாட்டிகொண்ட வண்டியை தானாகவே முயற்சி செய்து வெளியில் எடுத்து வருவதில், அவள் வாழ்கையில் போராடி வருகிறாள் என்பதுவாக படம் முடிகிறது.

Sunday

As Far As My Feet will Carry Me


இரண்டாம் உலகப்போரின்போது சைபீரியாவின் சுரங்கத்தில் ஜெர்மானிய வீரர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு சுரங்கத்தில் உள்ள மருத்துவரின் உதவியால் அங்கிறுந்து தப்பிக்கிறான் படத்தின் கதாநாயகன். அது பனிக்காலம். எங்கும் பனி.சைபீரியாவை நடந்தே

கடக்கிறான். பனிப்புயல், சூறாவளி என்று இயற்கையின் சீற்றங்களில் தனி மனிதனாக ஒவ்வொரு அடியாக நடந்து செல்கிறான். வழியில் இரு ரஷ்ய வேட்டயர்களை சந்திக்கின்றான். அவர்களின் உதவியுடன் காட்டாற்றை கடந்து செல்கிறான். மீண்டும் பனி மலைகளின் நடுவே பயணம். ஓநாய்களின் பிடியில் சிக்கிய அவனை அங்கு வாழும் ஒரு சிறு பழங்குடி மக்கள் காப்பாற்றுகிறார்கள். பிறகு அங்கிருத்து பயணபடுகிறான். சில ரயில் பயணம். பெரும்பாலும் கால்நடையாக மட்டுமே. இப்படியே நடந்து பெர்சியாவை அடைகிறான். ( இங்கு தாஜ்மஹாலின் பிம்பம் போலவே முழுமை பெறாத கட்டிடம் ஒன்று உள்ளது). அங்கு ஒரு போலந்து நாட்டுகாரனின் உதவியுடன் ரஷ்யாவின் எல்லையை கடக்க போலி பாஸ்போர்ட் எடுத்து கொண்டு பயணிக்கிறான். இதற்கு நடுவே இவனை தேடிபிடித்தே தீரவேண்டும் என்ற வெறியோடு அந்த சுரங்கத்தின் கமான்டர் அவனை தேடிகொண்டிருக்கிறான். அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து. ரஷ்யாவின் எல்லையை கடந்து டெஹ்ரானின் எல்லையை அடைகிறான்.

அங்கு அவன் ரஷ்ய உளவாளி என்ற சந்தேகத்தில் சிறைபடுகிறான். பிறகு 2 வருடங்கள் கடந்து ஜெர்மானிய அரசு அதிகாரியின் உதவியால் ரஷ்ய உளவாளி இல்லை என்று அறிந்து டெஹ்ரானில் இருந்து பெர்லின் சென்று தனது மனைவி, குழந்தைகளோடு சேர்கிறான்.

1942 வருடம் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறான். சுரங்கத்தில் இருந்து 1949 வருடம் தப்பித்து 1952 வருடம் மீண்டும் தனது குடும்பத்தை அடைகிறான்.



Sin Nombre


Willy, Smiley என்ற 12 வயது சிறுவனை Mara Salvatrucha என்ற மெக்ஸிகோ street gang கிடம் சேர்ப்பதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. Sayra தனது தந்தையுடனும், மாமாஉடனும் New Jersy செல்ல திட்டமிட்டு ஒரு சரக்கு ரயிலின் கூரை மீது பயணிக்கிறார்கள். இவர்களது பயணம் Visa,Immigiration ஏதும் இல்லாமல் ஆபத்தான சூழ்நிலையில் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவை கடப்பது. இதற்கு இடையில் willy ன் காதலியை அந்த street gang ன் தலைவன் கொன்றுவிடுகிறான். இந்த சூழலில் willy, smiley, street gang leader மூவரும் Sayra பயணம் செய்யும் ரயிலில் கொள்ளை அடிக்க செல்கின்றனர்.

அங்கே sayra வுடன் தவறாக நடக்க முயற்சிக்கும் தலைவனை willy கொன்றுவிடுகிறான். smiley யை திரும்ப போகசொல்லிவிட்டு அந்த ரயிலிலேயே பயணம் செய்கிறான். திரும்பசென்ற smiley யை அவனது கூட்டாளிகள் அனைவரும் சந்தேகிக்க அந்த 12 வயது சிறுவன் willy யை கொன்றுவிட்டு வருவதாக சொல்லி willy யை தேடி செல்கிறான். sayra, willey யையும் தங்களுடன் அமெரிக்க வந்துவிடுமாறும் தங்களுடன் இருக்குமாறும் கேட்கிறாள். தனது சாவு தனக்கே தெரியாது. இந்த சூழலில் நான் உங்களுடன் வருவது உங்களுக்கும் பாதுகாப்பு அல்ல எனகூறி அவளிடம் இருந்து பிரிந்து செல்கிறான். ஆனால் sayra அவனை பின்தொடர்கிறாள். Sayra வை காணாமல் அவளில் தந்தையும்,மாமாவும் ரயிலில் இருந்து இரங்கி பிறகு அவளை எங்கு தேடுவது என்று தெரியாமல் மீண்டும் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். ரயில் மேல் mexico Border யை கடக்க முயற்சி செய்பவர்களை போலீசார் தடுபதற்காக செய்கின்ற துப்பாக்கிசூட்டில் Sayra வின் தந்தை இறந்து விடுகிறார். சில பல தடைகளை மீறி Willy, Sayra வுடன் மெக்ஸிகோ எல்லையை கடக்க முயல்கையில் Smiley அவனது கூட்டாளிகளுடன் சேர்ந்து willy யை கொன்றுவிடுகிறான். sayra எல்லையை கடந்து தனது தந்தையின் குடும்பத்தோடு சேர்கிறாள்.



Tuesday

சோதிடம்

"பொதுவாகவே சோதிடம் இன்ன பிற மர்மமான விஷயங்கள் குறித்த நம்பிக்கைகள் எல்லாம் ஒரு பலவீனமான மனதின் அடையாளங்கள். எனவே இத்தகைய விஷயங்கள் உங்கள் மனதில் பிரதானமாக விளங்க ஆரம்பித்ததென்றால் உடனே நல்ல மருத்துவரை பார்த்து நன்றாக உணவருந்தி ஓய்வெடுங்கள் " - சுவாமி விவேகானந்தர் .

கோள்கள் வானில் உலவிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். விண்துகள்கள் என்ற நுண் அணுக்களின் கூட்டம்தான் கோள்கள். இந்தக் கோள்கள் சூரியனை மையமாகக் வைத்து, தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இவைகளின் சுழல்வேகம், தொலைவு மற்றும் தற்சுழல் வேகம் ஆகியவைகளைக் கணக்கிடுவது வானியல் (ASTROLOGY) ஆகும். நமது சூரியக் குடும்பம் போல் பல சூரியக் குடும்பங்கள் உள்ளன. அவைகளையெல்லாம மேஷம், ரிஷபம் போன்ற பெயரிட்டு வைத்துள்ளனர். அவைகளையும் ராசிகள் என்ற வகையில் மொத்தம் 27 நட்சத்திரம் உள்ளன. பிறக்கும்போது என்ன நட்சத்திரமோ, அது எந்த ராசியைச் சேர்ந்ததோ, அதுவே லக்னம் என கூறப்படுகிறது. சோதிடம் என்பது வானியலையும் உள்ளடக்கியதே.

கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்தையும் பஞ்ச அங்கம் என்கிறோம். அதைக் கூறும நூல்களை பஞ்சாங்கம் என்கிறோம். வாரத்தில் ஏழுகிழமைகள் (நாட்கள்) உள்ளன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை திதி என்று கூறுகிறோம். பிரதமை முதல் பவுர்ணமி அல்லது அமாவாசை முடிய 15 திதிகள் உள்ளன. சஷ்டி, அஷ்டமி, நவமி முதலியன பெரும்பாலானோருக்குத் தெரிந்த திதிகள்; நட்சத்திரங்கள் 27. கரணம் என்பது திதியில் பாதி, பயிர்த்தொழில் தொடர்பான பலன்களைக் கண்டறிய உதவும் கணக்கு, யோகம் என்பது சூரியனும் சந்திரனும் ஒரு குறித்த இடத்திலிருந்து செல்லும் மொத்த தூர அளவைக் கணக்கிட்டுப் கூறுவது. மொத்தம் 27 யோகங்கள் உள்ளன

சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது.

வெப்ப மண்டல சோதிடம் Uranus, Neptune மற்றும் Pluto கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு கேது கோள்களையும் 27 நட்சத்திரங்களையும் கணக்கில் எடுப்பதில்லை.
இந்திய சோதிடம் நெப்தியூன், யுறேனஸ், புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இராகு கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.

சோதிடம் ஞாயிறு(சூரியன்) குடும்பத்தின் மையம் புவி(பூமி) என்று சொல்கிறது. அதன் மையம் ஞாயிறு என்பது நாம் அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை .சூரியன் ஒரு விண்மீன் இதுதான் அறிவியல் உண்மை ஆனால் சோதிடம் சூரியன் போன்ற விண்மீனையும் நிலா போன்ற துணைக் கோளையும் கோள்களாகவே கொள்கிறது .

சோதிடத்தில் ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் இடம் முக்கியமானது. ஆனால் குழந்தையின் பிறப்பு என்னும் பொழுது அது குழந்தை கருவறையில் இருக்கும் பொழுது உயிர் ஏற்பட்ட நேரமா? பிறக்கும் பொழுது தலை வெளியில் தெரிந்த நேரமா? கால் தரையில் படும் நேரமா? மருத்துவச்சி கையில் எடுத்த நேரமா? தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நேரமா? மருத்துவர் வயிற்றை அறுத்து எடுத்த நேரமா? குழந்தையின் முதல் மூச்சா? அல்லது அழுகையா? இதில் எது என்பதில் சோதிடர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. இரண்டொரு மணித்துளி நேர வித்தியாசம் ஒரு குழந்தை பிறக்கும் சமயத்தில் அடிவானத்தில் எழுகிற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இலக்கினம், சந்திரன் நின்ற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இராசி, பிறப்புக் காலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இடம்பெற்று இருந்ததோ அந்தப் பிறப்பு (ஜென்ம) நட்சத்திரம் ஆகியவை வேறு வேறாக மாறி விட வாய்ப்பு இருக்கிறது.

புவி தன்னைத்தானே தனது அச்சில் சுற்றும்பொழுது தளம்பல் ஏற்படுகிறது. அதனால் ஞாயிறு தனது பயணத்தில் புவியின் நடுவட்டக்கோட்டைக் கடக்கும் பொழுது முந்திய ஆண்டைவிட மறு ஆண்டு சற்று மேற்கு நோக்கிக் கடக்கிறது. இந்த வேறுபாட்டை வெப்ப மண்டல சோதிடம் கணக்கில் எடுப்பதில்லை. இரண்டுக்கும் இடையிலான இந்த வேறுபாடு இன்று ஏறத்தாழ 24 பாகையை (24 நாள்களை) எட்டி இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கோள்கள், இராசிகள் மற்றும் விண்மீன்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்றால் அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? பல கோடி கல் அப்பால் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? ஆம் என்றால் அந்தக் குழந்தைக்கு அண்மையில் உள்ள பருப்பொருள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசை ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை?

புவியின் நடுவட்டக்கோட்டுக்கு அண்மித்த நிலப் பகுதிகளிலேயே சோதிட சாத்திரம் தோற்றம் பெற்றது. இதன் தார்ப்பரியம் என்னவென்றால் நடுவட்டக்கோட்டுக்கு வடக்கே Alaaska, Norvey, Finland, Greenland போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதகம் கணிப்பது முடியாத செயலாகும். காரணம் இந்த நாடுகளில் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணித்தியாலத்துக்கு ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆட்டங்கண்டு விடுகிறது.

ஏழரைச்சனி: சனியானது ஒரு ராசிக்கும் ஒரு சுற்று சுற்றி வர 30 ஆண்டுகளாகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து புறப்பட்டு வட்டப் பாதையில் சுமார் 88 கோடி மைல் தொலைவில் சூரியனை ஒருமுறை சுற்றிவர சனி எடுத்துக் கொள்ளும் காலம் தான் இந்த 30 வருடங்கள். சனியானது சந்திரன், அதற்கு முன்னும் பின்னுமுள்ளது என மூன்று நிலைகளையும் கடக்க தலா 21 ஆண்டுகள் வீதம் மொத்தம் 71 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. இதைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்று கூறுகிறோம்.

சாதகப் பொருத்தத்தில் செவ்வாய் தோசம் பெரும் குறையாகக் கருதப்படுகின்றது. சாதகத்தில் செவ்வாய், இலக்கினம், சந்திரன், சுக்கிரனுக்கு 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இருக்கிறது என்று பொருள். இலக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்க்கு தோசம் ஏற்படுகிறது. மணப்பெண், மணமகன் இருவர் சாதகத்திலும் இந்த இடம் அமையாவிட்டால் நல்லது. இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பாக இருந்தாலும் நல்லதுதான்.

மிதுனம், கன்னி ஆகிய வீடுகளில் 7 அல்லது 8 ஆம் இடமாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் கடும் தோசம் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு நடப்பு திசை செவ்வாயாக இருந்தால் மிகவும் பாதிக்கப்படுவர்.

மேடம், கடகம், விருச்சிகம், மகரங்களில் செவ்வாய் குருவோடு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோசம் இல்லை.

செவ்வாய் தோசம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதைப் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டால் அந்த திசை புத்தி நேரங்களில் கணவரையோ அல்லது மனைவியையோ இழக்க நேரலாம். அல்லது பிரிய நேரலாம். திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இந்தச் செவ்வாய் திசை முடிந்துவிட்டால் சிக்கல் இல்லை.

மேற்கூறிய 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் கீழ்க்கண்ட வீடுகளாக இருந்தால் தோசம் இல்லை. அவைகளாவன:

1) மேடம், விருச்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இந்த இரு வீடுகளும் செவ்வாய்க்கு ஆட்சி வீடு என்பதால் தோசமில்லை.
2) மகரம், கடகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இதில் மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடு என்பதாலும் கடகம் நீச வீடு என்பதாலும் தோசமில்லை.
3) தனுசு, மீனம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இது நட்பு வீடாக இருப்பதால் தோசமில்லை.
4) கும்பம், சிம்மம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை இதில் கும்பம் சனி வீடாகவும், சிம்மம் சூரியனின் வீடாகவும் இருப்பதால் செவ்வாய் தோசம் அடிபடுகிறது.
5) சந்திரனுடன் செவ்வாய் இணைந்திருந்தால் சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இதனால் செவ்வாய்க்குத் தோசம் இல்லை.

விவாகப் பொருத்தம் பற்றிச் சொல்லும் வாக்கிய பஞ்சாங்கம் பிராமணருக்கு அதிபதியும், சத்திரியருக்குக் கணமும், வைசியருக்கு பெண் தீர்க்கமும் சூத்திரர்க்கு யோனியும் பிரதானமாகப் பொருந்த வேண்டும் என்கிறது.

விவாகப் பொருத்தத்தில் கூட வேதங்களின் ஓர் அங்கமான சோதிடம் நால்வருணத்தைப் புகுத்தி இருக்கிறது. கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஒருவன் பிராமணன், ஒருவன் சத்திரியன், ஒருவன் வைசிகன், ஒருவன் சூத்திரன் என்ற வருண வேறுபாடு தெரியுமா?

சாத்திரமானாலும் சடங்கானாலும் எங்கும் வருணவேறுபாடு சோதிட சாத்திரம் எழுதியவர்களால் திட்டமிட்டுப் புகுத்தப் பட்டுள்ளது. கோள்களை வருண அடிப்படையில் வகுத்திருக்கிறார்கள்.

நமது சூரிய மண்டத்திலுள்ள கோள்களிலிருந்து வரும் அலைகள் நம் உடலில் சிறு உறுப்புகளுடன் தொடர்புடையவையாக உள்ளன. இவை கூடும் போதோ, குறையும்போதே அந்த உறுப்புகளில் பாதிப்பு உண்டாகும்.

சூரியன் - எலும்பு; புதன் - தோல்; சுக்கிரன் - உயர்ச்சக்தி; சந்திரன் - இரத்தம்; செவ்வாய் - மஜ்ஜை; குரு - மூளை; சனி - நரம்புகள்; ராகு, கேது - மனம்

உதாரணமாய் புதனின் காந்த அலைக்கதிர்கள் போதிய அளவு கிடைக்காதபோது தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். இவைகளைச் சரிசெய்ய புதனின் சக்தியைப் பெற ஒரு சில இடங்களைக் கண்டறிந்து, நவக்கிரக தலங்கள் என்று வாழிபாட்டுத் தலங்களாக விட்டுச் சென்றுள்ளனர். நம் முன்னோர். அங்கு சென்றால், புதனின் காந்த அலைக்கதிர்களைப் பெற்று பாதிப்புகள் விலகும் வாய்ப்பு உண்டு.
ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்."
சோதிடம் - பித்தலாட்டம்

The Mirror

Jafar Panahi என்ற ஈரானிய இயக்குனர் இயக்கிய திரைப்படம். Mina என்ற பள்ளிச்சிறுமி பள்ளி முடிந்து தனது தாயாருக்காக காத்திருகிறாள். Minaவின் தாய் வராததால் Mina தானாகவே வீட்டிற்கு செல்லலாம் என்று பேருந்து நிலையம் சென்றடைகிறாள். ஒரு பேருந்தில் ஏறுகிறாள் ஆனால் அந்த பேருந்து வேறு ஒரு வழித்தடத்தில் சென்று விடுகிறது. கடைசியாக இந்த சிறுமி மட்டும் பேருந்தில் இருந்து இறங்காததை கண்ட பேருந்து ஊழியர் அவளிடம் விவரம் கேட்கிறார் பிறகு தனது சகஊழியர் ஒருவரிடம் சொல்லி அந்த சிறுமியை அவள் போக வேண்டிய இடத்தில் இறக்கிவிட சொல்கிறார்.

ஒரு கை உடைந்து கட்டுபோட்டிருக்கும் அந்த சிறுமி என்னால் இனி இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கட்டுக்களை அவிழ்த்துவிட்டு பேருந்தில்லிருந்து இறங்கி விடுகிறாள். எவளவோ பேசியும் அவள் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு போகிறாள்.
பேருந்தில் பயணிகளின் உரையாடல், ஈரான் தென்-கொரிய soccer match ரேடியோ ஒலிபரப்பு. நகரத்தின் பரபரப்பு, போக்குவரத்து என அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.
கையில் போட்டிருக்கும் கட்டுக்களை அவிழ்க்கும் முன்பு ஒரு குரல் கேட்கும் கேமரா வை பார்காதே என்று பிறகு இனி இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சென்று விடுவாள். அப்பொழுதுதான் நமக்கு தெரியும் அது Movie Shooting என்று.
அவளோடு அந்த shooting கில் நடித்த ஒரு மூதாட்டியை வழியில் பூங்காவில் சந்தித்து பேசுவாள். நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று அதற்கு காரணம் என்ன என்று அந்த மூதாட்டியிடம் கூறுவாள். " எபோழுதும் அழுவது போலவே இருக்க வேண்டும், அது மட்டுமல்லாது இந்த கை உடைந்தது போன்ற கட்டு. இதை என் நண்பர்கள் பார்த்தால் என்னை கேலி செய்வார்கள் " இப்படி கூறுவாள்.
ரசிக்கும் படியான நிறைய காட்சிகள் உண்டு. அழகான திரைப்படம்